எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

எமி பீட்டர்சன்கட்டுரைகள்

உடனடி பரிகாரம்

அந்த வன வழிகாட்டியைப் பின் தொடர்ந்து சென்று, மிகவும் பழமை வாய்ந்த, பஹாமியன் காட்டிலுள்ள தாவரங்களைக் குறித்து, அவர்  கொடுக்கும் குறிப்புகளை வேகமாக எழுதிக் கொண்டேன். சில மரங்களின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றார். அந்தக் காட்டிலுள்ள ஒரு நச்சு மரம் கருமையான, ஒரு வகை திரவத்தை வெளியிடும். அது நம்மேல் பட்டால் வலியையும், ஊறலையும், தடிப்பையும் கொண்டு வரும். ஆனால் அதனைக் குறித்து கவலை கொள்ள வேண்டாம், ஏனெனில், இதற்கான மாற்று மருந்து அம்மரத்தின் அருகிலேயே கிடைக்கும். “எலீமி மரத்தின் சிவந்த பட்டையை சற்று வெட்டினால், அவ்விடத்தில் ஒரு வகை பிசின் சுரக்கும். அதை ஊறல் உள்ள இடத்தில் தடவினால், ஊறல் உடனே மறைந்து விடும்” என்றார்.

நான் ஆச்சரியத்தில் திகைத்து நின்றேன். நான் இத்தகைய ஒரு மீட்பின் செய்தியை இந்தக் காட்டினுள் எதிர்பார்க்கவேயில்லை. எலிமி மரப்பிசினில் நான் இயேசுவைக் கண்டேன். பாவமாகிய நச்சு நம்மைத் தீண்டும் போது, பரிகாரியாகிய இயேசு நம்மண்டை ஆயத்தமாக இருக்கின்றார். அந்த மரத்தின் பட்டையைப் போன்று, இயேசுவின் இரத்தம் நமக்கு சுகத்தைத் தருகின்றது.

மனித குலம் சுகத்தைப் பெற்றுக்கொள்ள ஏங்கி நிற்பதை ஏசாயா தீர்க்கதரிசி புரிந்து கொண்டார். பாவத்தின் விளைவு நம்மை வியாதிக்கு உட்படுத்தியது. நம்முடைய பாடுகளை தன்மீது ஏற்றுக்கொண்ட தேவக் குமாரனின் துன்பத்தின் வழியாக நமக்குத் தேவையான சுகம் வருகிறது என ஏசாயா தீர்க்கன் வாக்களிக்கின்றார் (ஏசா. 53:4). அந்த தேவக் குமாரன் தான் இயேசு கிறிஸ்து. நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டார், நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும் போது, நம்முடைய பாவத்தின் ஆக்கினையிலிருந்து மீட்கப்பட்டு, சுகம் பெறுவோம் (வச. 5) நம்முடைய பாவங்களை கண்டுணர்ந்து, அவற்றை தள்ளி விட்டு, நமக்குத் தரப்பட்டுள்ள புதிய அடையாளத்தை பெற்றுக் கொண்டவர்களாய், பாவ வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றவர்களாய் வாழ, நம் வாழ்நாளெல்லாம் செலவிட்டாலும், அது இயேசுவிடமிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும்.

உறவுகளுக்காக உருவாக்கப்பட்டது

'வாடகைக்கு குடும்பங்கள்" என்ற தொழிலானது அதிகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ஏனெனில், தனிமையில் வாடும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சிலர் இவ்வித சேவைகளை தங்களது தோற்றத்திற்காக பயன்படுத்தி, தாங்கள் ஒரு மகிழ்ச்சியான குடும்பத்தை உடையவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். சிலர் நடிகர்களை வாடகைக்கு அமர்த்தி மாயையான உறவுகளின் தோற்றத்தினை உருவாக்கிக் கொள்ளுகிறார்கள். இதன்மூலமாக அவர்கள் தாங்கள் விரும்புகிற உறவுகளைப்;பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.

இந்த காரியமானது ஒரு அடிப்படை உண்மையை வெளிப்படுத்துகிறது : மனிதர்கள் உறவுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். சிருஷ்டிப்பின் கதையை ஆதியாகமத்தில் நாம் வாசிக்கும்பொழுது, தேவன் தாம் உருவாக்கின ஒவ்வொரு காரியத்தையும் கண்டு அவைகள் நல்லவை என்று கண்டார் (1:31). ஆனால், தேவன் ஆதாமைக் குறித்து சொல்லும்போது, 'மனிதன் தனிமையாயிருப்பது நல்லதல்ல" (2:18) என்று கூறுகிறார். ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் தேவை.

வேதாகமம், சாதாரணமாக நம்முடைய தேவை உறவுகள் என்றுமட்டும் கூறவில்லை. அது இவ்வித உறவுகளை நாம் எங்கே கண்டுபிடிக்கவேண்டும், அதுவும் இயேசுவைப் பின்பற்றுபவர்களின் உறவுகளை எவ்விதம் பெறமுடியும் என்றும் கூறுகிறது. இயேசுவானவர் தன் மரணத்தின் போது அவருடைய நண்பரான யோவானிடம் தன் தாயை அவருடைய தாயாக்கிக் கொள்ளும்படி கூறுகிறார். அவர்கள் குடும்பமாக தங்களை இணைத்துக்கொண்டு, இயேசுவானவர் போன பிறகும் வாழவேண்டும் என விரும்பினார் (யோவா. 19:26-27). பவுலும், மற்றவர்களை பெற்றவர்களாகவும், கூடப்பிறந்தவர்களாகவும் நினைக்க வேண்டும் எனக் கூறுகிறார் (1 தீமோ. 5:1-2). தேவனுடைய மீட்பின் பணியானது, 'தனிமையானவைர்களைக் குடும்பமாக்குவது" தான் என்பதை சங்கீதக்காரன் நமக்கு சொல்லுகிறார் (சங். 68:6). தேவன் இந்த காரியத்தினைச் செய்ய சிறந்த இடமாகத் திருச்சபையை உருவாக்கினார். உறவுகளை நமக்குக் கொடுத்து, தம் பிள்ளைகளை நமக்கு குடும்பமாக கொடுத்த தேவனுக்கு நன்றி.

உற்சாகப்படுத்துதலின் வல்லமை

பெஞ்சமின் வெஸ்ட் ஒரு சிறுவனாக இருந்தபோது தன் சகோதரியின் படத்தை வரைய முற்பட்டான். ஆனால் அவனால் அதை சிறப்பாக வரையமுடியவில்லை. ஆனால் அவனுடைய அம்மா அவன் வரைந்த ஓவியத்தைப் பாராட்டி அவன் நெற்றியில் முத்தமிட்டார்கள். பிற்காலத்தில், அந்த முத்தமே அவரை ஒரு சிறந்த ஓவியனாக உருவாக்கினது என சாட்சி கூறினார். அவர் அமெரிக்காவின் சிறந்த ஒரு ஓவியனாக மாறினார். உற்சாகப்படுத்துதல் என்பது ஒரு வலிமையுள்ள ஆயுதம்.

ஒரு பிள்ளை வரையக் கற்றுக்கொள்ளுவது போல பவுலுக்கும் அவருடைய ஊழியத்தில் அந்தக் காலத்தில் போதுமான அனுபவம் கிடையாது. ஆனால், பர்னபாஸ் பவுலின் அழைப்பைக் குறித்து உறுதியாக இருந்தார். பர்னபாவின் உற்சாகப்படுத்துதலின் மூலமே, சபையானது சவுலை ஒரு சக விசுவாசியாக ஏற்றுக்கொண்டது (அப். 9:27). பர்னபாவும் அந்தியோகியாவிலுள்ள வளர்ந்துவரும் திருச்சபையை உற்சாகப்படுத்தி, அப்போஸ்தலர் நடபடிகளிலேயே ஒரு சிறப்பான திருச்சபையாக உருவாக்கினார் (அப். 11:22-23). அதுமட்டுமல்லாமல், பர்னபாவின் உற்சாகப்படுத்துதலினாலும், பவுலின் ஊக்கப்படுத்துதலினாலும் எருசலேம் திருச்சபை, புறஜாதியாரை சக விசுவாசக் கிறிஸ்தவர்களாகத் தழுவிக்கொண்டது (15:19). எனவே, ஆதித்திருச்சபையானது, பல வழிகளில் உற்சாகப்படுத்துதலின் கதையாக அமைந்திருக்கிறது.

இதே காரியம் நம்முடைய வாழ்க்கையிலும் பொருத்தப்பட வேண்டும். உற்சாகப்படுத்துதல் என்றால் நாம் மற்றவர்களிடம் ஒரு சில நல்ல வார்த்தைகளைப் பேசுவது என்றே நாம் அறிந்துகொள்ளுகிறோம். ஆனால், அப்படி நாம் நினைத்து விடுவோமானால், அதன் வல்லமையை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. இது நம்மையும், நம் திருச்சபையின் வாழ்வையும் உருவாக்க தேவனால் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். நாம் நம்முடைய வாழ்வில் பெற்றுக்கொண்ட ஊக்கப்படுத்துதல்களுக்காகவும், அதில் நாம் மற்றவர்களுக்குக் கொடுத்த தருணங்களுக்காகவும் அவரை ஸ்தோத்தரிப்போம்.

வாழ்க்கைமூலம் கற்றுக்கொடுங்கள்

ஆடு-புலி ஆட்டம்போல பலகைகளை வைத்து விளையாடுகிற விளையாட்டுகள் ஏராளம் உள்ளன. அப்படியொரு விளையாட்டு பலகை ஒன்று கிடைத்ததும் என் ஆறு வயது மகன் ஓவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. ஆனால் அரைமணிநேரம் விளையாட்டு விதிகளை வாசித்தபிறகு, அவனுக்கு சலிப்புத்தட்டிவிட்டது. எவ்வாறு அந்தப் பலகையை வைத்து விளையாடுவது என்று அவனுக்குப் புரியவில்லை. அந்தச் சமயத்தில் நண்பர் ஒருவர் வந்தார். அவருக்கு அதில் விளையாடி அனுபவமுண்டு.  அவர் விளையாடிக் காண்பித்த பிறகுதான், தனக்கு பரிசாகக் கிடைத்த அந்தப் பலகை அவனுக்கு முக்கியமானதாகத் தெரிந்தது.

அவர்கள் இருவரும் விளையாடியதைப் பார்த்தபோது, அனுபவமுள்ள ஆசிரியர் ஒருவர் இருந்தால் புதிய விஷயங்களை எளிதில் கற்றுக்கொள்ளலாம் என்பது புரிந்தது.  விதிமுறைகளை வாசித்தும் கற்றுக்கொள்ளலாம்; ஆனால் செயல்முறையோடு யாராவது விளக்கிச் சொன்னால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதை நன்றாகப் புரிந்திருந்தார். சபையானது விசுவாசத்தில் வளருவதற்கு தீத்து எவ்வாறு உதவியாக இருக்கமுடியும் என்று எழுதும்போது, அனுபவமிக்க விசுவாசிகளின் பங்கு அதில் மிகவும்  முக்கியமானதென பவுல் வலியுறுத்துகிறார். ‘ஆரோக்கியமான உபதேசம்” முக்கியம்தான்; ஆனால் வெறுமனே அதைப் போதிப்பது மட்டும் போதாது, அதன்படி வாழ்ந்துகாட்டவேண்டியதும் முக்கியம். முதிர்வயதுள்ள ஆண்களும் பெண்களும் தன்னடக்கமுள்ளவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இருக்கவேண்டியது அவசியமென பவுல் எழுதுகிறார் (தீத்து 2:2-5). “நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பி” என்று சொன்னார். வசனம் 7.

ஆரோக்கியமான உபதேசத்திற்காக நன்றிசொல்லுகிறேன், ஆனால் அவற்றின்படி வாழ்ந்து போதிக்கிறவர்களுக்காகவும் நன்றிசொல்லுகிறேன். கிறிஸ்துவின் சீடன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று அவர்கள் தங்களுடைய வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்; நானும் அந்தப் பாதையில் எவ்வாறு நடக்கலாமென எளிதில் கண்டுகொள்ளவும் உதவியிருக்கிறார்கள்.

தேவன் சந்தோஷமாய் மகிழ்கிறார்

என்னுடைய பாட்டி சமீபத்தில் ஒரு கோப்பு நிறைய பழைய புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.  நான் இரண்டு வயது சிறுமியாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டில் நெருப்புமூட்டுகிற இடத்தில், ஓர் ஓரத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன். மறுபக்கத்தில் என் அம்மாவின் தோள்களில் என் அப்பா கைபோட்டவாறு அமர்ந்திருக்கிறார். இருவரும் அன்போடும் சந்தோஷத்தோடும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை என் துணிமணிகள் இருந்த அலமாரியில் ஒட்டிவைத்தேன், தினமும் காலையில் அதைப் பார்ப்பேன். அவர்கள் என்மேல் வைத்திருந்த அன்புக்கு ஓர் அருமையான அடையாளம் அது. அந்தப் படத்தை நான் பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்கான காரணம்
என்னவென்றால், சிலசமயங்களில் மனிதர்களுடைய அன்பு தோற்றாலும்கூட தேவ அன்பு ஒருபோதும் மாறாதது என்பதை அது நினைவூட்டுவதால்தான். அந்தப் படத்தில் என் பெற்றோர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது போலவே தேவன் என்னைப் பார்ப்பதாக வேதாகமம் கூறுகிறது.

தேவனுடைய அன்பைப் பற்றி செப்பனியா தீர்க்கதரிசி விவரிக்கிற விதமானது என்னைப் பிரமிக்கச் செய்கிறது. தேவன் தம் மக்கள்மேல் களிகூர்ந்து, மகிழ்ச்சியுடன் பாடுவதாகக் கூறுகிறார். தேவ பிள்ளைகள் அந்த அன்பைச் சம்பாதித்து வாங்கவில்லை. அவர்கள் அவருக்குக் கீழ்ப்படியாமலும் ஒருவர்மேல் ஒருவர் மனதுருக்கமாக நடக்காமலும் இருந்தார்கள். ஆனால் இந்தத் தோல்விகளுக்கு மத்தியிலும் தேவ அன்பே இறுதியில் மேலானதாக விளங்குமென செப்பனியா வாக்குரைக்கிறார். தேவன் அவர்களுடைய தண்டனையை நீக்கி (செப்பனியா 3:15), அவர்கள்மேல் சந்தோஷப்பட்டுக் களிகூருவார். வசனம் 17.  தம் மக்களாகிய அவர்களை தம் கரங்களுக்குள் கூட்டிச்சேர்த்து, அவர்களை சொந்தத் தேசத்திற்கு வழிநடத்திச் சென்று, புது வாழ்வைக் கொடுப்பார். வசனம் 20.

ஒவ்வொரு நாள் காலையிலும் தியானிப்பதற்கு தகுதியான அன்பு அது.

ஒருவருக்கொருவர் தேவை

எல்லாவற்றையும் இழந்துபோனபோது

விழிப்பாயிரு

நான் வெப்பமான தென்புற பட்டணங்களிலேயே வளர்ந்ததால், வடபுறம் இடம் பெயர்ந்த போது பல மாதங்களாக பனிபடர்ந்து காணப்படும் நீண்ட சாலைகளில் பாதுகாப்பாக கார் ஓட்டக் கற்றுக்கொள்ள பல நாட்களாயின. நான் முதல் முறையாக, கடினமான குளிர்காலத்தைச் சந்தித்தபோது மூன்று முறை பனிக்குள் சிக்கி, வெளியேற வழிதெரியாமல் திகைத்தேன்! ஆனால், பல ஆண்டு அநுபவத்திற்குப் பின், பனி நேரங்களிலும் பாதுகாப்பாக கார் ஓட்டுவதற்குக் கற்று கொண்டேன். பனிச்சூழலில் மிகவும் நன்றாக கார் ஓட்டக் கற்று கொண்டேனென என்னைக் குறித்து சற்று அதிகமாகவே நினைத்துக் கொண்டேன். நான் மிகவும் விழிப்பாக, நிறுத்தினேன், அப்பொழுது கருமையான இருப்பதை ஒரு பனிக் குவியலின் மீது மோதி, வழுக்கி சாலையோரமிருந்த ஒரு டெலிபோன் கம்பத்தில் மோதினேன்.

நல்ல வேளை, ஒருவரும் காயப்படவில்லை. ஆனால், அன்று நான் ஒன்றினைக் கற்றுக்கொண்டேன். நான் நன்றாகத்தான் ஓட்டுகிறேன் என்று எத்தனை ஆபத்தை விளைவிக்கின்றது என்பதைத் தெரிந்து கொண்டேன். கவனமாயிருப்பதற்குப் பதிலாக, காரை தானாக ஓட்டும் ஒரு (Auto Pilot) போட்டிருந்தேன்.

நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் இத்தகைய விழிப்புணர்வை செயல்படுத்துவது அவசியமாயிருக்கின்றது. வாழ்க்கையில் சிந்தனையில்லாமல் வழுக்கிக் கொண்டு செல்லும் நிலையை கவனமற்றிருப்பது விசுவாசிகள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாதென பேதுரு எச்சரிக்கின்றார். விழிப்பாயிருங்கள் என்கின்றார் (1 பேது. 5:8). பிசாசானவன் நம்மை அழிப்பதற்கு சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றான். எனவே நாமும் சோதனைகளுக்கு எதிர்த்து நிற்கவும், விசுவாசத்தில் உறுதியாயிருக்கவும் விழிப்பாயிருக்க வேண்டும் (வச. 9) ஆனால், இது நம்முடைய சுயபெலத்தினால் செய்யக் கூடிய ஒன்றல்ல. “சகல கிருபையும் பொருந்திய தேவன் தாமே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலை நிறுத்துவார்” (வச. 10) அவருடைய வல்லமையால் நாம் விழிப்பாயிருந்து பிசாசுக்கு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி தேவனைப் பற்றிக்கொள்வோம்.

பொக்கிஷத்தைத் தேடிப்பார்த்தல்

புதையுண்ட பொக்கிஷம் - இது கேட்பதற்கு ஏதோ குழந்தைகளின் கதைப்புத்தகத்தில் வருவது போல தோன்றுகிறது. ஆனால், வினோத குணம் படைத்த, கோடீஸ்வரரான ஃபாரஸ்ட் ஃபென் இரண்டு மில்லியன் டாலர் மதிப்புடைய நகைகளும், தங்கமும் நிரம்பப்பெற்ற பெட்டகமொன்றை பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் போட்டுவிட்டதாகக் கூறுகின்றார். அநேகர் அதனைத் தேடிச் சென்றனர். இந்த மறைந்த செல்வத்தைத் தேடிச் சென்ற நான்கு பேர் தங்கள் உயிரையும் இழந்தனர்.

நீதிமொழிகளை எழுதியவர் நம்மை நின்று சற்று யோசிக்குமாறு சொல்கின்றார். இத்தகையத் தேடலுக்கு உகந்ததுதானா இந்த பொக்கிஷம்? நீதிமொழிகள் 4ல் ஒரு தந்தை தன் மகனுக்கு, அவன் நன்றாய் வாழ்வதற்குத் தேவையானவற்றைக் குறித்து எழுதுகின்றார். எல்லாவற்றையும் காட்டிலும் ஞானமே தேடிக் கண்டடைய உகந்ததென குறிப்பிடுகின்றார் (வச. 7). ஞானத்தின் வழியில் ஒருவன் நடந்தால், அவன் நடைகளுக்கு இடுக்கண் வருவதில்லை, அவைகளில் ஓடினாலும் இடறமாட்டார்கள், அது அவன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்
(வச. 8-12) என்கின்றார்.

பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இயேசுவின் சீடனான யாக்கோபு ஞானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார். 'பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும் மாயமற்றதாயுமிருக்கிறது (யாக். 3:17). நாம் ஞானத்தைத் தேடும்போது எல்லா நன்மைகளும் நம் வாழ்வில் செழித்தோங்குமெனக் குறிப்பிடுகின்றார்.

ஞானத்தைத் தேடுவது என்பது எல்லா ஞானத்திலும், அறிவிற்கும் காரணரான தேவனைத் தேடுவதற்குச் சமம். இவ்வுலகில் புதைந்துள்ள அனைத்து பொக்கிஷங்களையும் விட பரத்திலிருந்து வருகின்ற ஞானமே விலையேறப் பெற்றது.